» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜேந்திர பாலாஜி மீதான ரூ.7 கோடி சொத்துக் குவிப்பு புகார் : விசாரணை ஒத்திவைப்பு

வெள்ளி 17, செப்டம்பர் 2021 5:34:53 PM (IST)

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்குச் சொத்து சோ்த்துள்ளதாகவும், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு இரு வேறு மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது. 

அமைச்சா் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென நீதிபதி சத்தியநாராயணனும், வழக்குப் பதிவு செய்வதால் எந்தப் பயனும் இல்லையென நீதிபதி ஹேமலதாவும் தீா்ப்பில் தெரிவித்திருந்தனா். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதி நிா்மல்குமாா் முன்பு இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது வழக்கின் விசாரணையை செப்.24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனு செப்.20-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory