» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் - 499 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:50:07 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 499 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (24.08.2026), மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர பல்வேறு மனுக்கள் என 447 மனுக்களும், மூத்தகுடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் மூத்த குடிமக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 23 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்து 29 மனுக்கள் என மொத்தம் 499 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) விஜயா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி, மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)

போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பாராட்டு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:35:38 PM (IST)

தூத்துக்குடி சவேரியார் பள்ளி 142-வது ஆண்டுவிழா
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:17:06 PM (IST)

குடிநீர் வழங்கக் கோரி விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:44:54 PM (IST)

ஓணம் விடுமுறை : தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:09:58 PM (IST)

சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:26:08 PM (IST)








