» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பு கூட்டம் தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் சார்பில் புனித மரியன்னை மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் மாநில செயலாளர் சொர்ணவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் மருதப்பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினாா்கள். தூத்துக்குடி மாவட்டக் குழு காது கேளாதோர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் மாவட்டத் தலைவராக பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளராக தங்கராஜ், பொருளாளராக சிவன்ராஜ், துணைத் தலைவராக சின்னத்தம்பி, துணைச் செயலாளராக தாமஸ் போஸ்கோ, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செயற்குழு உறுப்பினர்களாக அரிராமன் ராணி, சரவணன், நிக்சன், மகாலட்சுமி, பிரவீனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனா். காது கேளாதோர் மக்களின் உரிமைகள், நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் கூட்டம் நிறைவுற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:26:08 PM (IST)

தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்: மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:40:01 AM (IST)

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:22:06 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)








