» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 80ஆவது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 12:54:17 PM (IST)

சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில், 80ஆவது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனத்தின் மூத்த உதவி தலைவர் ஜி. ஸ்ரீநிவாசன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் இரத்ததானம் செய்து வரும் நிறுவனத்தின் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், ஆலை பணியிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை சிறப்பாகக் கடைப்பிடித்து, அவசர காலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட பணியாளர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, 70 முறைக்கு மேல் இரத்ததானம் செய்து சமூகப் பணியில் சிறப்பாகப் பங்களித்து வரும் ஐஎன்டியூசி செயலாளர் பி.எஸ். முருகனுக்கு சிறப்புப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் நிறுவனத்தின் உதவி தலைவர்கள், மூத்த பொதுமேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் பாதுகாப்புத் துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆக.29ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு தகவல்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:50:14 PM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிரதமர் மோடி கலந்துரையாடல்: ஆக.27-ல் நடைபெறுகிறது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:22:35 PM (IST)

அனைத்து வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு : பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:01:06 PM (IST)

பொதுவெளியில் மது அருந்துவதைத் தட்டிய கேட்ட நபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 7:56:10 PM (IST)

வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:42:31 PM (IST)

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புகையில் சோகம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 5:03:41 PM (IST)








