» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வயரிங் வேலை பார்த்தபோது தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி!

புதன் 20, மே 2026 8:11:50 AM (IST)

கோவில்பட்டியில், ஒரு வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்த போது, கீழே விழுந்து படுகாயமடைந்த எலக்ட்ரீசியன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலை, தங்கப்பன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன் (37). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 16-ஆம் தேதி, கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோவில் அருகே உள்ள நியூ வெங்கடேஷ் நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரது வீட்டில் எலக்ட்ரிக் வேலைகள் செய்வதற்காக, தனது உதவியாளரான ராஜா என்பவரை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு அறையின் உள்கட்டமைப்பில் சங்கரநாராயணன் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி சுமார் 4 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையின் பின்புறம் மற்றும் உள்காயங்கள் ஏற்பட்டுப் பலத்த காயமடைந்தார். காயமடைந்த சங்கரநாராயணனை அங்கிருந்தவர்கள் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலன் தராமல் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து மரணம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory