» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

10ம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி வாழ்த்திய சார் ஆட்சியர்

செவ்வாய் 10, மார்ச் 2026 8:19:24 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் ஹால் டிக்கெட் வழங்கி சார் ஆட்சியர்  ஹீமான்சு மங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் "மீண்டும் மஞ்சப்பை" குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹீமான்சு மங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர், வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்குத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசிய அவர், மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கி, தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பள்ளியின் முன்னாள் மாணவி சுப்பு சுந்தர வடிவு என்பவரின் தாயார் கிருஷ்ணம்மாளின் நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளியில் பயிலும் சுமார் 2,500 மாணவிகளுக்கு இலவசமாக மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, உதவித் தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் இயற்பியல் ஆசிரியை கிரேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசுமைப்படை ஆசிரியர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்து முருகன், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இசை ஆசிரியை அமல புஷ்பம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இறுதியாக, ஆசிரியை மங்களேஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory