» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தலில் 100% வெற்றி பெற்றுள்ளதாக எஸ்டிகே ராஜன் தலைமையிலான அணியினர் தெரிவித்தனர்.
தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலத்துக்கான தேர்தல் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி திருமண்டலத்தில் உள்ள 6 சபை மன்றங்களிலும் நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர், ஆசிரியர் பிரதிநிதிகள் சார்பில் பெருமன்ற உறுப்பினர்கள் தேந்தெடுத்தல், சபை மன்ற செயலாளர் மற்றும் ஆரம்ப கல்வி நிலவர குழு, குருத்துவ நிலவர குழு, சமூக நலத்துறை குழு என பல்வேறு உப கமிட்டிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.
தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணியும், டி.எஸ்.எப்.கிப்ட்சன் தலைமையிலான அணியும் நேரடியாக போட்டியிட்டது. கடந்த முறை டி.எஸ்.எப் அணியில் இருந்த மோகன்ராஜ் அருமைநாயகம், ஜான்சன் டேவிட் உள்ளிட்டோர் இந்த முறை எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணியில் இணைந்து பணியாற்றினர். இதனையடுத்து பரபரப்பாக நடைபெற்ற கவுன்சில் தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணியினர் 6 சபை மன்றத்திலும் உள்ள 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றனர்.
அதன்படி நாசரேத் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக மாமல்லன், ஸ்டீபன் சாலமோன், பியூலா ரத்தினம், மோசஸ் ராஜகுமார், சபைமன்ற செயலாளராக கோயில்ராஜ் தேர்வு செய்யப்பட்டனர். கோவில்பட்டி இராக்லாண்ட் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக ஜான்சிங், தனராஜ், அபிநயா, சுபா, சபை மன்ற செயலாளராக கிருபைராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி பேராயர் இராபர்ட் கால்டுவெல் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், ஜெபச்சந்திரன், செலினா, ஜானியேல் சாலமோன் மணிராஜ், சபை மன்ற செயலாளராக ராபர்ட்ரவிசிங் பெஞ்சமின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சாயர்புரம் டாக்டர் ஜி.யு. போப் சபைமன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக அருள்மேயர் மால் சொர்ணபாண்டியன், சுகந்தி, சேகர், சபை மன்ற செயலாளராக செல்வின் ஜோஸ்வா ஆகியோரும், சாத்தான்குளம் தாவீது சுந்தரானந்தனார் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக குணசீலன் தங்கதுரை, சுபாஸ், பெர்சி சுந்தர், ஸ்டீபன், சபை மன்ற செயலாளராக இன்பராஜ் ஆகியோரும், மெஞ்ஞானபுரம் ஜாண் தாமஸ் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக எட்வர்ட், அருள்ராஜா, கரோலின், எமர்சன், சபை மன்ற செயலாளராக கிறிஸ்டியன் தங்கதுரை ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இது தவிர சேகர ஊழியர் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகளாக 30 பேரும், திருமண்டல ஊழியர் மற்றும் நிறுவனங்ளின் பிரதிநிதிகளாக 18 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 2 பிரதிநிதிகள் தவிர மற்ற அனைத்து பதவிகளையும் எஸ்.டி.கே.அணியினர் கைப்பற்றினர். வெற்றி பெற்ற அனைவரும் முன்னாள் லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இறுதியாக வரும் 30, 31 ஆகிய தேதிகளில் நாசரேத்தில் வைத்து திருமண்டல பெருமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல லே செயலர், உபதலைவர், குருத்துவ செயலர், திருமண்டல பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு உப கமிட்டிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் எஸ்டிகே ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இரண்டு அணிகள் போட்டியிடும் போது இதுவரை நடைபெற்ற தேர்தலில் ஒரு அணி 40 சதவீதமும் மற்றொரு அணி 60% வெற்றி பெறும். இந்நிலையில் எங்கள் அணிதான் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ஒன்பது வருட நிர்வாகம் எனது கைவசம் இருந்தது கடந்த மூன்று வருட காலமாக எதிர் அணி நிர்வாகம் செய்து வந்தது அவர்கள் மீது அதிருப்தி தான் காரணம் ஊழல் தான் முக்கிய காரணமாக உள்ளது.
வருகிற 30-ம் தேதி லே செயலாளர் தோ்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் நாங்கள் வெற்றி பெறுவோம் உடனடியாக லே செயலாளர் பதவி பொறுப்பு ஏற்கப்படும். புதிய கட்டிடம் கட்டியதில் முறைகேடும் நடைபெற்றதாக கூறப்பட்டதை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி பொதுப்பணித்துறை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து அதனடிப்படையில் நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்துள்ளார்.
எதிரணி தோல்வியை கண்டுள்ளதால் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் தேர்தல் நடத்தும் அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி வாக்களிக்க கூடியவர் அல்ல. அவர் தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரி வாக்களிப்பது டயோசிசன் மக்கள் தான் அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததால் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் யாரையும் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. அந்தக் கட்டிடம் கட்டியதில் 13.5 கோடி ரூபாய் எடுத்துள்ளனர் 4 கோடியில் தான் வேலை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எல்லா பதவிகளுக்கும் எதிரணியினர் போட்டியிட்டு தான் தோல்வி அடைந்துள்ளனர் சில பதவிகளுக்கு போட்டி போட ஆள் இல்லாமல் எங்களது ஆட்கள் 4பேர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை நடைபெற்றுள்ள தேர்தலில் ஒரே அணி 100% வெற்றி பெற்றது கிடையாது முதன்முறையாக இந்த முறை தான் 100% எங்கள் அணி வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார். பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், இரா ஹென்றி, மோகன் ராஜ் அருமைநாயகம் உள்ளிட்ட திருமண்டல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
JJSingamDec 15, 2025 - 12:25:36 PM | Posted IP 104.2*****
அண்ணாச்சி SDK ராஜன் தலைமையில் திருமண்டலம் சாட்சியாக மாற அன்புடன் வாழ்த்துகிறேன். இந்த DSF Giftson அப்பா துரைராஜ் தான் diocese நாசமாவதுக்கு காரணம். அதை அவர் மகன் துணையோடு சில அல்லக்கைகளும், குருவானவர் என்று சொல்லிக்கொள்ளும் சில காவாளிகளும் மேலும் நாசமாக்கிவிட்டனர். நல்ல ஊழியம் செய்யும் குருவானவர்களை மதிப்பதில்லை. பணம் சம்பாதிப்பது, அதிகார துஸ்பிரயோகம் செய்வது மட்டும்தான் DSF அணியினர் வேலை.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











தமிழ்ச்செல்வன்Dec 16, 2025 - 02:40:08 PM | Posted IP 104.2*****