» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண சலுகை அட்டை : ஆன்லைன்னில் விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 26, நவம்பர் 2024 7:37:15 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் ரயில் பயண சலுகை டிஜிட்டல் அட்டை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பெறும் வசதியை தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அனைத்து ரயில்களிலும் பயணிக்கும் மாற்றுத்திறனா ளிகள், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகையை பெற்று பயணிக் கின்றனர். இந்த கட்டண சலு கையை பெறுவதற்கு முறையாக ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து சலுகை கட்டணத்திற்கான அடையாள அட்டையைப் பெற்றிருக்க வேண்டும்.

இதற்காக அந்தந்த ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இருக்கும் வணிகப்பிரிவு அலுவலர்கள் மூலம் மாற்றுத்திறனா ளிகள் கட்டண சலுகை அட்டையை பெற்று வருகின்றனர். இதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கி பெறும் நிலையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக டிஜிட்டல் வசதியை அனைத்து கோட்டங்களிலும் படிப்படியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்படி, தென்னக ரயில்வேயின் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. 

இதன்மூலம் மாற்றுத்திறனா ளிகள் சலுகை அடையாள அட்டையை பெறவும், புதுப்பிக்கவும் ரயில்வே அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் இதற்காக https://divyangjanid.indianrail gov.in/ என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்தினாளி பயணிகள், தங்களின் சலுகை அடையாள அட்டையைப் பெற அல்லது புதுப்பிக்க தேவையான ஆவணங்களை அப்லோட் செய்து தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம். 

இதற்கு தகுதியுடைய நபர்களாக பார்வை குறைபாடு உள்ள நபர்கள், பார்வை முழுமையாக இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்கள். செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள நபர்கள், எலும்பியல் பியல் ஊனமுற்றோர், முடக்கவாத நபர்கள் இருத்தல் வேண்டும். இந்த சலுகை அடையாள அட்டையை பெறும் மாற்றுத்திறனாளிகள். சலுகையுடன் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை டிக்கெட் கவுண்டர்கள் அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ள லாம். மாற்றுத்திறனாளிகளுக்கான சீசன் டிக்கெட் பெறவும், இந்த அடையாள அட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory