» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு தொடக்க விழா அணி வகுப்பு : திரளான தொண்டர்கள் பங்கேற்பு
திங்கள் 7, அக்டோபர் 2024 8:46:36 AM (IST)

திருச்செந்தூரில் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு நேற்று அணி வகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு நேற்று மாலையில் திருச்செந்தூர் மையிலப்பபுரம் தெருவில் இருந்து அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. மாசானமுத்து தலைமை தாங்கினார்.
இந்த ஊர்வலம் உள்மாட வீதி, பந்தல் மண்டபம், சன்னதி தெரு, பள்ளத்தெரு, சபாபதிபுரம் தெரு, புளியடித்தெரு, தாலுகா ஆபீஸ் ரோடு, நாடார் தெரு, சலவையாளர் தெரு, வெயிலுகந்தம்மன் கோவில் தெரு, ஜீவாநகர், பட்டர்குளம் தெரு வழியாக கல்யாணசுந்தரம் விநாயகர் கோவில் தெருவை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுமார் 200 தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றனர்.
பின்னர் கல்யாணசுந்தரம் விநாயகர் கோவில் தெருவில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நகர தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். ராஷ்ட்ரிய சேவா பாரதி அகில பாரத பொறுப்பாளர் பத்மகுமார் ‘தற்கால சூழலில் ஹிந்துத்துவா' என்ற புத்தகத்தை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.
இந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் வசந்தராஜ் (திருச்செந்தூர்), ராமகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் மேற்பார்வையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய அமைச்சரை அவமரியாதை செய்த திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை!
திங்கள் 10, மார்ச் 2025 8:47:33 PM (IST)

வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் விசாரணை!
திங்கள் 10, மார்ச் 2025 8:33:58 PM (IST)

தூத்துக்குடியில் 13ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கோட்டாட்சியர் தகவல்!
திங்கள் 10, மார்ச் 2025 8:15:05 PM (IST)

தமிழக எம்.பிக்கள் குறித்து மத்திய அமைச்சர் அவதூறு பேச்சு: விஜய் வசந்த் எம்.பி கண்டனம்!
திங்கள் 10, மார்ச் 2025 8:04:48 PM (IST)

மிக கனமழை எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
திங்கள் 10, மார்ச் 2025 7:59:52 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!
திங்கள் 10, மார்ச் 2025 7:51:32 PM (IST)
