» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து : தெற்கு ரயில்வே தகவல்
வியாழன் 3, அக்டோபர் 2024 12:03:03 PM (IST)
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரயில் (வண்டி எண் 06674/06409) இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதே போன்று திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 6, 8, 10-ந் தேதிகளில் இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக தலைவர் அண்ணாமலை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வரவேற்பு
புதன் 12, மார்ச் 2025 9:21:13 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
புதன் 12, மார்ச் 2025 9:16:42 PM (IST)

தூத்துக்குடியில் 151பேருக்கு கணினி பட்டா: அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
புதன் 12, மார்ச் 2025 7:54:20 PM (IST)

மாணவர்களிடையே சாதிய உணர்வுகளை விதைக் கூடிய யாராக இருந்தாலும் நடவடிக்கை: ஆட்சியர்
புதன் 12, மார்ச் 2025 7:43:07 PM (IST)

கற்குவேல் அய்யனார் கோவிலில் ராஜகோபுரம் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!
புதன் 12, மார்ச் 2025 5:44:38 PM (IST)

பள்ளி மாணவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: பெரியாரிய உணர்வாளர்கள்
புதன் 12, மார்ச் 2025 5:39:39 PM (IST)
