» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உலக இருதய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
புதன் 2, அக்டோபர் 2024 11:06:38 AM (IST)

தூத்துக்குடியில், உலக இருதய தினத்தை முன்னிட்டு சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் இருதய நலத்துறையான இதயாலயா தி ஹார்ட் சென்டர் சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் எஸ். அருள்ராஜ் மற்றும் இருதய நல நிபுணர் டாக்டர் T. நீலாம்புஜன் தலைமை தாங்கினர். விழாவில் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர், எம்பவர் இந்தியா கவுரவ செயலாளர் ஆ.சங்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இருதய நலமும் மகளிரும் எனும் தலைப்பில் இந்திய மருத்துவர் சங்கம் தூத்துக்குடி கிளையின் தலைவர் டாக்டர் பூங்கோதை சிறப்புறை ஆற்றினார். மேலும் ரோட்டரி கிளப் ஆஃப் பியர்ள்ஸ் சிட்டி தூத்துக்குடியின் தலைவர் டாக்டர் விக்னேஷ் வாழ்த்துறை வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொது மக்களுக்காக நடத்தப்பட் விழிப்புணர்வு போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடியை சேர்ந்த சுமார் 200க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துக்கொன்டனர். இதை தொடர்ந்து பொது மக்களுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது, இதில் எக்கோ, ஈ.சி.ஜி, இரத்த சர்க்கரை, மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதிலும் பொதுமக்கள் திரளானோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 11, மார்ச் 2025 4:25:41 PM (IST)

பள்ளி மாணவர் மீது கொலை வெறி தாக்குதல்: நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,யிடம் கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 3:50:27 PM (IST)

சாலைகளின் ஓரங்களில் உள்ள விளம்பர பேனர்கள் அகற்றம் : ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 11, மார்ச் 2025 3:26:21 PM (IST)

நெல்லை- திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் 2 நிமிடம் நின்று செல்ல கோரிக்கை!
செவ்வாய் 11, மார்ச் 2025 3:08:26 PM (IST)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம்: 14ஆம் தேதி துவக்க விழா
செவ்வாய் 11, மார்ச் 2025 12:12:29 PM (IST)

லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்!
செவ்வாய் 11, மார்ச் 2025 11:30:06 AM (IST)
