» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிரேன் ஆபரேட்டருக்கு அரிவாள் வெட்டு: நண்பர்கள் 2பேர் கைது!

புதன் 29, மே 2024 10:52:26 AM (IST)

தூத்துக்குடியில் கிரேன் ஆபரேட்டரை அரிவாளால் வெட்டிய அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் இருதயராஜ் மகன் விஜய் (28). கிரேன் ஆபரேட்டராக வேலைப் பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த விமல் மகன் வினோத் (22). இப்ராஹிம் மகன் ரகுமான் (27) இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று நண்பர்கள் மூவரும் மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வினோத், ரகுமான் ஆகிய இருவரும் சேர்ந்து விஜயை அரிவாளால் வெட்டினார்களாம். இதில காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அங்குத்தாய் வழக்குப் பதிந்து வினோத், ரகுமான் ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

மாரிமுத்துமே 29, 2024 - 06:00:53 PM | Posted IP 162.1*****

இதே வேறு தெருவிலிருந்து வந்து பாத்திமா நகரில் உள்ளே இறங்கி அந்த தெருவில் உள்ள நபரை வெட்டியவர்களை கைது செய்ய முடியாத காவல்துறை மாதம் இரண்டு ஆக போகிறது..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory