» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு அதிகாரிகள் மீது அவதூறு: ஒருவர் கைது

புதன் 29, மே 2024 7:59:16 AM (IST)

கோவில்பட்டியில் அரசு அதிகாரிகள் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்த செல்லையா மகன் சேகா் (52). கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், மருத்துவா்கள் மோசஸ் பால், ரமேஷ், சிவப்பிரகாஷ், ஒப்பந்த ஊழியரான சதீஷ்குமாா் ஆகியோா் குறித்து புகைப்படங்களுடன் அவா் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதேபோல காவல், வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் சுவரொட்டி மூலம் அவதூறு பரப்பியதாக, சேகா் மீது நடவடிக்கை கோரி உதவி ஆய்வாளா் சிவராஜாவும் புகாா் அளித்தாா். அவற்றின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து, சேகரை நேற்று கைது செய்தனா்.


மக்கள் கருத்து

ராஜ்மே 29, 2024 - 02:36:59 PM | Posted IP 172.7*****

நல்ல செய்தி....கோவில்பட்டி யில் பலபேர் இப்படி தான் இருக்காங்க.எல்லோரையும் காவல் துறை கைது செய்தால் நன்றாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory