» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி : ஆட்சியர் ஆலோசனை

வெள்ளி 10, மே 2024 5:13:13 PM (IST)



தூத்துக்குடி, கோவில்பட்டியில் நடைபெற உள்ள "கல்லூரி கனவு" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்குபெற மாணவ-மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அழைப்பு விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவ-மாணவியர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாணிக்கம் மஹால் மற்றும் கோவில்பட்டி நேஷ்னல் பொறியியல் கல்லூரியிலும் நாளை 11.05.2024 அன்று காலை 9 மணி முதல் மாபெரும் "கல்லூரி கனவு" - உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவ/மாணவியர்களும் கலந்து கொண்டு பயனடைவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 56 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் 10.05.2024 காணொலிகாட்சி வாயிலாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இம்மாபெரும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் அளிப்பதே "கல்லூரி கனவு" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை, நுழைவுத்தேர்வு, கல்விக்கடன் உள்ளிட்ட பிற அத்தியாவசிய தகவல்களும், பள்ளிக்கல்விக்கு பிறகு மாணவர்கள் அனைவரும் அர்த்தமுள்ள உயர்கல்வி படிப்புகளைத் தொடரச் செய்வதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

12-ஆம் வகுப்பு தேர்வு முடிந்து அடுத்து எந்த துறையில் என்ன படிக்கலாம்? என்ற கேள்விகளுடன் உள்ள மாணவர்கள் தொடரக்கூடிய உயர்கல்வியின் அவசியம் குறித்து தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர், இரா.சுதன், பொது நூலகத்துறை இயக்குநர் க.இளம்பகவத், கல்வியாளர் இராஜேஷ் ஆகியோரும், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை & ஊக்கத்தொகை, வங்கியில் கல்விக்கடன் பெறுவது குறித்தும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளர்கள், ஜி.டியூக்சன் சத்தியராஜ், ஜே.பெஞ்சமின் ஆகியோரும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள் குறித்து கல்லூரி பேராசிரியர்கள் முனைவர்.எஸ்.காயத்ரி, எஸ்.சுந்தர்ராஜ், கருப்பசாமி, சுப்புராயலு ஆகியோரும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த படிப்புகள் குறித்து கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி முதல்வர், எம்.தேரடிமணி மற்றும் பாக்கியது சலிகா ஆகியோரும், மீன்வள அறிவியல் குறித்து ஜி. அருளொளி மற்றும் ரவிக்குமார் ஆகியோரும், கால்நடை மருத்துவம் குறித்து பசுபதி மற்றும் அ. மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் சிறப்புரையாற்ற உள்ளனர். 

பொறியியல் மற்றும் அதனை சார்ந்த படிப்புகள் குறித்து பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர். பி.வெங்கலகுமார், எஸ்.ராஜா குமார், பி.முத்தரசு, டி.மாரிச்செல்வம் ஆகியோரும், தொழிற்பயிற்சி குறித்து வேல்முருகன், இ.மணி ஆகியோரும், சட்டம் & சட்டக்கல்வி, சார்ந்த படிப்புகள் குறித்து சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் ஹெச். வள்ளித்தாய் மற்றும் பி.ராதா ஆகியோரும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்புகள் குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் சூரிய பிரதிபா மற்றும் ஆர்.பாலமுருகன் ஆகியோரும், செவிலியர் பட்டயப் படிப்புகள் குறித்து ஞானசிரோன்மணி ஹெலன் இந்திராணி மற்றும் ராஜ் இந்திரா ஆகியோரும், ஆயுர்வேதம், சித்தா மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து எம்.லதா, மரு.சி.செல்வக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

மேலும், சுயதொழில் மற்றும் தொழில் முனைவோராக விருப்பம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் குறித்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ணலதா, சுவர்ணதேவி பாலசுப்பிரமணியன், ஜி.அகிலா, என். மணிகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றி ஆலோசனை வழங்க உள்ளார்கள்.

மேலும், மாணவ, மாணவியர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகள் மற்றும் குடிமைப்பணிகள் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது தொடர்பான ஆலோசனைகளும், மாணவ/மாணவியர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு மத்திய அரசின், இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம் ஆட்சிப்பணி அலுவலர்கள் மரு.நித்திலா, இந்திய வருவாய் பணி அலுவலர், கார்த்திகா, தூத்துக்குடி மாநரகராட்சி ஆணையாளர் எல்.மதுபாலன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு மற்றும் துணை காவல்கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் ஆலோசனை வழங்கவுள்ளனர்.

மேலும், இம்மாபெரும் நிகழ்ச்சியில், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும நிலைய இயக்குநர் (ISRO) மற்றும் விஞ்ஞாணி ஆசீர் பாக்கியராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்களும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

உயர்கல்வி சேர்க்கையின் போது தேவைப்படக்கூடிய சாதிச்சான்று, இருப்பிடச் சான்று மற்றும் வருமானச்சான்று உள்ளிட்ட அத்தியாவசிய சான்றுகள் இதுவரை பெறாத மாணவ மாணவியர்கள் இந்நிகழ்ச்சியின் போது விண்ணப்பித்து உடனடியாக சான்றுகள் பெற்றிட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெறும் கல்லூரி கனவு நிகழ்வினை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் எல்.மதுபாலன், கோவில்பட்டி நேஷ்னல் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் கல்லூரி கனவு நிகழ்வினை தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) செல்வி.ஆர்.ஐஸ்வர்யா அவர்களும், ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திட உள்ளார்கள்.

இம்மாபெரும் நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் பெருமளவு கலந்து கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தால் பயின்ற பள்ளிகளிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றிட அனைத்து வட்டங்களிலிருந்தும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றிட இலவச பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory