» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்கம்பம் நட வசூல்: இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

புதன் 8, மே 2024 8:35:45 AM (IST)

தூத்துக்குடியில் மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் கட்டணம் கேட்டதாக, இளநிலைப் பொறியாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் விரிவாக்கப் பணிகளின்போது மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விதிகள் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக இளநிலைப் பொறியாளரான தேவசுந்தர்ராஜ், மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த விடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதுதொடா்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதையடுத்து, அவா் நேற்று  பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக, தூத்துக்குடி மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory