» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள்
திங்கள் 6, மே 2024 3:11:56 PM (IST)
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் கேக் வெட்டினாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தனது 54வது பிறந்தநாளை முன்னிட்டு தாயார் எபனேசர் அம்மாளிடம் ஆசி பெற்று முன்னாள் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பொியசாமியின் நினைவு இல்லத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுலவகமான கலைஞர் அரங்கில் கேக் வெட்டி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். முன்னதாக கலைஞர் அரங்கம் முன்பு ஏற்கனவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குளிர்பான பந்தலில் இளநீா் பாயாசம் மோர் பழரசம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களோடு அமைச்சரும் அருந்தினார். முன்னதாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது.
விழாவில், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி ஓன்றிய குழுதலைவர் கஸ்தூாி, மாநில பிரச்சாரகுழு செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ஜெஸிபொன்ராணி, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, அருணாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பாிதி, ரூபராஜா, மகளிர் அணி கவிதாதேவி, மாணவரணி சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர் முருகேசன், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் நூல்கள் சால்வைகள் பூங்கொத்து மாலைகள் வழங்கி அமைச்சருக்கு வாழ்த்துகளை தொிவித்தனர்.