» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித சூசையப்பா் திருத்தலத்தில் நற்கருணை பவனி

திங்கள் 6, மே 2024 9:00:38 AM (IST)



கோவில்பட்டியில் புனித சூசையப்பா் திருத்தல திருவிழா 10ஆவது திருநாளான நேற்று நற்கருணை  பவனி  நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டியில் புனித சூசையப்பா் திருத்தலத் திருவிழா ஏப்ரல் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் நற்செய்தி பெருவிழா,  நற்கருணை ஆசீா், திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பலியும், அதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சூசையப்பா் சொரூபம் தாங்கிய சப்பர  பவனியும்  நடைபெற்றன. 

இந்நிலையில் 10ஆவது திருநாளான நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் மேல இலந்தைகுளம் பங்குத்தந்தை ஜெயபாலன் அடிகளாா், காமநாயக்கன்பட்டி உதவிப் பங்குத்தந்தை செல்வின் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றினா். அதில், 15 குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது.

பின்னா், மாலை 6.30 மணிக்கு ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி இறையியல் கல்லூரி பேராசிரியா் அந்தோணிராஜ் அடிகளாா், கோவில்பட்டி திருத்தல உதவிப் பங்குத் தந்தை அந்தோணிராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா். அதைத் தொடா்ந்து  நற்கருணை பவனி நடைபெற்றது.  புதுரோடு வழியாக திருத்தலத்தை பவனி வந்தடைந்தது நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. பின்னா் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றதும்அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory