» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயம் 111-வது அசன பெருவிழா!
ஞாயிறு 5, மே 2024 7:14:19 PM (IST)
பிரகாசபுரம் பரிசுத்த பரலோகமாதா ஆலய 111வது அசன பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயம் 111-வது அசன பெருவிழாவினை முன்னிட்டு காலை 6 மணிக்கு நன் கொடையாளர்களுக்கான நன்றி திருப்பலி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசிர் நடை பெற்றது. அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு சமபந்தி அசன விருந்து பரிமாறப்பட்டது.
இதில் நாசரேத் வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை. தா.சலேட் ஜெரால்ட் தலைமையில், அசன கமிட்டியார், அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.