» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஐடிஐ பயிற்றுனர் வீட்டில் கதவை உடைத்து ரூ.16 லட்சம் மதிப்புள் நகைகள் கொள்ளை!!

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 7:17:18 PM (IST)

திருச்செந்தூரில் ஐடிஐ பயிற்றுனர் வீட்டில் கதவை உடைத்து 38 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கமலா கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன்(33). ஐடிஐயில் பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்தியபாமா. இவர்களுக்கு கயில் முத்ரா(2) பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் காலையில் திருநெல்வேலியில் நடந்த   கோயில் கொடை விழாவிற்கு சென்று விட்டு நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உள்ளே சென்று பார்த்த போது, மர்ம ஆசாமிகள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து, வீட்டின் முகப்பு கதவு உடைத்து, டிராயரிலிருந்த பீரோ சாவி எடுத்து திறந்து அதிலிருந்த 38 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை  திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மர்ம ஆசாமிகள் பின்பக்க கதவைத் திறந்து சுவர் ஏறி குதித்து தித்து தப்பி சென்றது தெரியவந்தது. 

இது குறித்து மணிகண்டன் திருச்செந்தூர் கோயில் போலீசில் புகார் செய்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் டிஎஸ்பி வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் அந்த பகுதியில் பக்கத்து வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ. 16 லட்சம் ஆகும். திருச்செந்தூர் பகுதியில் அண்மை காலத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. அண்மையில் திருச்செந்தூர் சிவந்தி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் வீட்டில் நைட்டி மற்றும் முகமூடி அணிந்து உள்ளே சென்று 21 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் நகர பகுதியான கமலா கார்டனில் உள்ள வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. 

அடுத்தடுத்து சம்பவங்களால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதால் போலீசாருக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு சம்பவங்களில் மர்ம ஆசாமிகளை கண்டறிய வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என போலீஸ் டிஎஸ்பி வசந்தராஜ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory