» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வியாழன் 25, ஏப்ரல் 2024 11:26:28 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2023 - 2024ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் ‘என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயர்கல்வி தொடர்பான ஆலோசனை முகாம்கள் வருடத்திற்கு மூன்று முறை நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் ‘என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி Mass Movement For Transformation (MMT) And Nurture என்ற தன்னார்வ இயக்கங்கள் பிற தன்னார்வ இயக்கங்களுடனும், துறையுடன் இணைத்து நடத்தப்படுகிறது. மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து NURTURE AND MMT இயக்கங்களின் கல்வியாளர் மற்றும் பேச்சாளர் ஆ.அர்னால்டு பிரவுன், அவர்களால் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. 

12ம் வகுப்பு படித்து முடித்த பள்ளி மாணவ மாணவியர்களிடையே உயர்கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவ மாணவியர்கள் தங்களது மேற்படிப்பை விருப்பமுள்ள பாடங்களை தேர்ந்தெடுத்து பயிலவேண்டும். இது போன்ற வாய்ப்புகளை மாணவ மாணவியர்களாகிய நீங்கள் பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் காநாணயம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விக்னேஷ்வரன், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், தன்னார்வ இயக்கங்கள், அரசு அலுவலர்கள்கலந்துகொண்டனர். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவமாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


மக்கள் கருத்து

m.sundaramApr 25, 2024 - 11:57:34 AM | Posted IP 162.1*****

Good. But it should be monitored and the statistic about enrollment must also be published.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory