» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மற்றவர்களுக்கு வாக்களித்து வீணடித்து விடாதீர்கள்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

திங்கள் 15, ஏப்ரல் 2024 10:04:47 AM (IST)மற்றவர்களுக்கு வாக்களித்து வீணடித்து விடாதீர்கள். இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். 

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து பல்வேறு பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்து பேசுகையில் "மாநகர பகுதியில் கடந்த ஆட்சியில் செய்யாத பல பணிகளை செய்துள்ளோம். குறிப்பாக அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி, கால்வாய் வசதி, தட்டுபாடின்றி குடிநீர், உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். தமிழக முதலமைச்சர் தளபதியார் தோ்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகள் 3 ஆண்டுகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற பணிகள் தேர்தல் முடிவுக்குபின் தொடங்கப்படும்.

கடந்த வருடம் பெய்த எதிா்பாராத கனமழையால் வௌ்ளம் ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் 6 தொகுதிகளுக்கும் பாரபட்சமின்றி ஹெலிகாப்டர் இருசக்கர வாகனம் ஜேசிபி டிராக்டர் படகு உள்ளிட்ட பல வாகனங்களில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நோில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை பணிகளையும் வசதிகளையும் செய்து கொடுத்து மக்கள்நலனில் அக்கறை கொண்டு உழைத்த கனிமொழிதான் உங்களுக்காக குரல் கொடுப்பதற்கு மீண்டும் கனிமொழி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் உதயசூாியன் சின்னத்தில் பெருவாாியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடி தரவேண்டும்.

3 ஆண்டுகளாக தமிழக முதலமைச்சர் செய்த சாதனைகள் ஏராளம் மழை வௌ்ள காலத்தின் போது நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்து பார்வையிட்டு பல அமைச்சர்கள் அதிகாாிகளை முடிக்கிவிட்டு நான்கு நாட்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த நிா்வாகம் இப்போது 3 ஆண்டுகளாக செயல்படுகிறது. மாநகர பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாலை கால்வாய் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

விடுபட்ட மற்ற பணிகளும் தேர்தல் நடைமுறை முடிந்த பின்பு தொடரும். ஓன்றிய மோடிஅரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. மழை வௌ்ளக்காலத்தின் போது வந்த பார்க்க வில்லை. அவருடன் சேர்ந்து கொண்டு எடப்பாடியும் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களுக்கும் செயல்களுக்கும் துணை புாிந்து விட்டு இப்போது 2 பேருமே நாடகமாடுகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத இருவரும் நமக்கு தேவையில்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதின் மூலம் தமிழக மக்கள் நலன் அனைத்தும் சிறப்பாக நடைபெறும் பாரளுமன்றத்தில் கனிமொழியின் குரல் உங்களுக்காக ஓலித்திட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு வாக்களித்து வீணடித்து விடாதீர்கள். இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று பேசினார். 

பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளிதரன்,   மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவஹா், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி உட்பட பலர் கலந்து காெண்டனர். 

கோயில்பிள்ளைநகர், தெர்மல்நகர், கேம்ப் 1, முத்துநகர், ஊரணி ஒத்த வீடு, காதர் மீரான்நகர், ரகுமதுல்லாபுரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, அந்தோணியார் கோவில் ெதரு, ஜெயலாணி தெரு, பங்காள தெரு, சங்கராபுரம், புதுக்கிராமம், தாமோதரநகா், வண்ணார் தெரு, மேலசண்முகபுரம், கீழசண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory