» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் நிழல் இல்லா அதிசய நாள் செயல் விளக்கபயிற்சி

சனி 13, ஏப்ரல் 2024 3:36:50 PM (IST)



கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் இந்திரா நகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு நிழல் இல்லா அதிசய நாள்  செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்ச ரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடக ரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. கோவில்பட்டியில் ஏப்ரல் 13ம் தேதி நிழல் இல்லா நாளாகும். கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் மாணவிகள் வட்டமாக நின்றும் தரையில் குச்சியை ஊன்றியும் நிழல் இல்லா நாளை சரியாக 12.19 மணிக்கு கண்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை வகித்தார்.நர்சிங் கல்லூரி முதல்வர் சாந்திபிரியா முன்னிலை வகித்தார். தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் சம்பத் சாமுவேல், டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு நிழல் இல்லா நாள் மற்றும் வானியல் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தனர். இதில் ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory