» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமயமாதா பேராலயத்தில் சிலுவைப் பாதை பவனி

வெள்ளி 29, மார்ச் 2024 4:52:40 PM (IST)



தூத்துக்குடி புனித வெள்ளியை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற சிலுவைப் பாதை பவனியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு புனித  வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.  இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய வளாகத்தில் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக முள் கிரீடம் தரித்து ரத்தம் சிந்திய படி சிலுவையை சுமந்து 14 தலங்கள் வழியாக செல்வதை நினைவு கூறும் வகையிலான இயேசுபிரான் சொரூபம் ஆலய வளாகத்தில் உள்ள 14 தலங்களில் வழியாக கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு  தளங்களிலும் பங்குத்தந்தை ரூபஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிலுவைப்பாதை  பவணியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசுபிரானின் பாடுகளை கூறியபடி சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory