» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திங்கள் 4, மார்ச் 2024 12:30:41 PM (IST)
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழக முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.அதன்படி தூத்துக்குடியில் விவிடி சிக்கல் அருகே முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், என்.கே.பெருமாள், மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.