» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூரில் மழை வெள்ளத்தில் உதவியவர்களுக்கு பாராட்டு விழா

சனி 24, பிப்ரவரி 2024 4:18:29 PM (IST)செய்துங்கநல்லூர் சேனையர் சமுதாய மண்படத்தில் மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவிய செய்துங்கநல்லூர் சுற்றுப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 

ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார் தலைமை வகித்து அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இன்ஸ்பெக்டர் பத்பநாப பிள்ளை, துணை தாசில்தார் அய்யனார், சப் இன்ஸ்பெக்டர் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். 

வெள்ளத்தில் உதவிய வகைக்கு இரயில் வே கொடுத்த பணத்தினை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய தாதன்குளம் மக்கள், செய்துங்கநல்லூரில் மீட்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்கள், ஆறாம்பண்ணை, கால்வாய் ,படுகையூர் , வல்லநாடு, வசவப்பபுரம், ஸ்ரீவை பெரும்பத்து உள்பட பல்வேறு பகுதியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்க தலைவர் குமார். ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஸ்ரீவைகுண்டம் நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சந்துரு நன்றி கூறினார். 

உற்சாக மாக பணியாற்றிய இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமாக தொடர்ந்து இவர்களது பணி மிகவும் செம்மைப்படும். அதோடு மட்டுமல்லாமல் உயிரை துச்சமாக மதித்து படகு மூலம் சென்று பல உயிரை காப்பாற்றிய மீனவர்கள் உள்பட பலரை தாசில்தார் பாராட்டி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory