» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அஞ்சலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை!
சனி 10, பிப்ரவரி 2024 11:24:57 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்திய அஞ்சல்துறை அஞ்சலகங்களில் பணமுதலீடு செய்யும் சாவரின் தங்கப்பத்திர திட்டம் இந்த ஆண்டின் முதல் விற்பனையை 12.02.2024 முதல் 16.02.2024 வரை தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6263.00
இத்திட்டத்தில் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை பணம் முதலீடு செய்து பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். முதலீடு செய்துள்ள பணத்திற்கு ஆண்டிற்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். வட்டித்தொகை 6 மாதங்களுக்கு ஒருமுறை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதன் மூலம் வீடுகளில் தங்கம் காகித வடிவில் மட்டுமே இருக்கும். எனவே தங்க நகைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. 8 ஆண்டுகளில் இப்பத்திரம் முதிர்வடையும். எனினும் ஐந்தாண்டுகளுக்கு பின் பத்திரங்களை எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்து பணம் பெறலாம். அவசர தேவைக்கு தங்கப்பத்திரத்தை அரசு, தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியும்.
இப்பத்திரத்தைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான்கார்டு நகல் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மேலும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் போன்ற ஏதாவதொரு அடையாள அட்டை நகலும் கட்டாயம் வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தலைமை. துணை மற்றும் கிராமப்புற தபால் நிலையங்களிலும் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு எங்களின் அஞ்சல் வணிக அலுவலர்களை 9942693129 (பொன்ராம் குமார்) மற்றும் 9791655030 (முகமது ஷமீம்) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு. பொன்னையா தெரிவித்துள்ளார்.