» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாய்க்கால் அருகில் தோண்டப்பட்ட ராட்சத குழியை மூட கோரிக்கை!

திங்கள் 20, நவம்பர் 2023 3:13:43 PM (IST)

துப்பாஸ்பட்டி கன்மாய்க்கு தண்ணீர் வரும் வாய்க்கால் அருகில் தோண்டப்பட்ட ராட்சத குழாயை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆ. கீழஅரசடி முன்னாள் ஊராட்சி தலைவர் ஜேசுதாசன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கீழ அரசடி ஊராட்சி துப்பாஸ்பட்டி கன்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி. மேற்படி கன்மாய்க்கு அருகில் ஊராட்சி நிர்வாகம் இராட்சச 100 அடி குழி தோண்டி மணல் எடுத்துவிட்டார்கள். 

கன்மாய்க்கு தண்ணீர் வரும் வாய்க்கால்அருகில் தோண்டியதால் கன்மாயில் உள்ள குடிநீர் எடுக்கும் கிணற்றிற்கு அருகில் தண்ணீர் வர வில்லை. கிணற்று அருகில் தடுப்பு சுவர் கட்டுகிறார்கள் ஊராட்சி தலைவர் மதன் இந்த கான்ட்ராக்ட்டை எடுத்து செய்து வருகின்றார். வட்டார வளர்ச்சி அலுவலர். ஒன்றிய பொறியாளர் ஆகியோர் பார்வையிட்டு இனி வரும் மழைக் காலங்களிலாவது வரும் தண்ணீரை சேமித்து வைக்க தோண்டப்பட்ட இராட்சச குழியை மூட போர்க்கால அடிப்படையில் நடவெடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education


New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory