» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாலி கட்டிய கையோடு காதல் மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த கணவன்!!!
வெள்ளி 26, மே 2023 10:08:12 AM (IST)

எட்டயபுரம் அருகே தாலி கட்டிய கையோடு காதல் மனைவியை தேர்வு எழுத கணவன் அழைத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள எத்திலப்பன்நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைவேல், சின்னம்மாள் தம்பதியின் மகன் சுந்தரவேல் ராமமூர்த்தி. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் - மாரியம்மாள் தம்பதியின் மகள் உமா மகேஸ்வரி. இவர் கீழ் ஈராலில் உள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
சுந்தரவேல் ராமமூர்த்தி. உமா மகேஸ்வரி. இருவரும் உறவினர்கள் மட்டுமின்றி சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவே, இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் உமா மகேஸ்வரிக்கு இறுதி ஆண்டுக்கான தேர்வு நேற்றுதொடங்கியுள்ளது. இதனால் தேர்வு எழுத வேண்டும் என்று உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதற்கு சுந்தரவேல் ராமமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்து மட்டுமின்றி, நேற்று காலையில் 7 - 9 மணிக்குள் முகூர்த்தம் இருந்துள்ளது. தாலி கட்டிய கையோடு சுந்தரவேல் ராமமூர்த்தி தனது மனைவி உமா மகேஸ்வரியை தேர்வு எழுத கல்லூரிக்கு அழைத்து வந்தார். கல்லூரி நிர்வாகத்தினர் புதுமணத் தம்பதியை வாழ்த்தியது மட்டுமின்றி, உற்சாகமாக தேர்வு எழுதும் படி உமா மகேஷ்வரியிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து உமா மகேஸ்வரியும் மகிழ்ச்சியோடு தேர்வரைக்கும் சென்று தேர்வு எழுதினார்.
தனது காதல் மனைவி தேர்வு எழுதி முடிக்கும் வரை சுந்தரவேல் ராமமூர்த்தி தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்து, தேர்வு முடிந்தவுடன் மகிழ்வோடு மனைவி அழைத்துச் சென்றார். இது குறித்து சுந்தரவேல் ராமமூர்த்தி நம்மிடம் கூறும்போது "திருமண மற்றும் தேர்வு ஒரே நாளில் வந்தது. கல்வி நமக்கு முக்கியம் என்பதால்,, தனது காதல் மனைவியை தாலி கட்டிய கையோடு மற்ற சம்பிரதாய வழக்கங்களை ஒத்தி வைத்துவிட்டு தேர்வு எழுத வந்ததாக கூறினார்.
உமா மகேஸ்வரி கூறும்போது "தேர்வு எழுத வேண்டும் என்று கேட்டதும் கணவரும் அவரது குடும்பத்தினரும், கல்லூரி நிர்வாகத்தினரும் சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி உற்சாகப்படுத்தியதாகவும், தேர்வினை சிறப்பாக எழுதி இருப்பதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். தாலி கட்டிய கையோடு நமக்கு கல்விதான் முக்கியம் என்று வந்த இந்த புதுமண காதல் தம்பதியை அனைவரும் வாழ்த்தியது மட்டுமின்றி பாராட்டியுள்ளனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

ஏன்மே 26, 2023 - 03:19:57 PM | Posted IP 162.1*****