» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த 2பேர் கைது

வியாழன் 1, டிசம்பர் 2022 8:52:58 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை ஜெக வீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் மகள் முருகேஸ்வரி (26), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மணிநகர் ரோட்டில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரது செல்போனை பறித்து சென்று விட்டனர். 

இந்த சம்பவம் குறித்து முருகேஸ்வரி மத்தியபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் தூத்துக்குடி கே.வி.கே., நகர் மேற்கு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் அருள் முத்துமணி (24), சக்தி விநாயகர் புரத்தைச் சேர்ந்த இருளப்பன் மகன் மணிகண்டன் (27) ஆகிய 2பேரும் செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து,. ரூ.10ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory