» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல குறுஞ்செய்தி செயலியான 'டெலிகிராம்' (Telegram) நிறுவனத்தின் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்ய உளவு அமைப்பான எஃப்.எஸ்.பி பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சர்வதேசப் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
டெலிகிராம் செயலியில் உள்ள 'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்' (End-to-End Encryption) என்ற பாதுகாப்பு வசதியைப் பயன்படுத்தி, பயங்கரவாத அமைப்புகள் மற்றும் குற்றவாளிகள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ரஷ்யா மீது உக்ரைன் படைகள் நடத்தி வரும் திட்டமிட்ட தாக்குதல்களுக்குத் தகவல் தொடர்புச் செயலியாக டெலிகிராமைப் பயன்படுத்தி வருவதாகவும், இதுபோன்ற கணக்குகளையும் தகவல்களையும் நீக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் டெலிகிராம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவிற்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் புதியதல்ல: முன்னதாக 'VKontakte' என்ற சமூக வலைதளத்தை நடத்திய பாவெல், அரசுக்கு எதிரானவர்களின் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள மறுத்ததால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக 2014-ல் ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகே அவர் 'டெலிகிராம்' செயலியை உருவாக்கினார். ஏற்கனவே இந்தியாவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டெலிகிராம் செயலி மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது நிறுவனர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பயங்கரவாதக் குற்றச்சாட்டும் பிடிவாரண்டும் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் இறந்துவிட்டாரா? பாகிஸ்தானில் கடும் பதற்றம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:42:06 AM (IST)

ஆகஸ்ட் 15 ‘இந்திய சுதந்திர நாள்’: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மாநிலங்கள் பிரகடனம்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:41:11 PM (IST)

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:50:59 PM (IST)

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)







