» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வெனிசுலாவை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் திட்டம்: அதிபர் டெல்சி நிராகரிப்பு!
புதன் 13, மே 2026 12:37:18 PM (IST)
எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி முன்மொழிவை, வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் வெனிசுலாவிற்குள் புகுந்த அமெரிக்கப் படைகள், அப்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோவைக் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகள் மீண்டும் அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.அமெரிக்காவில் தற்போது 50 மாகாணங்கள் உள்ள நிலையில், முன்னதாகக் கனடாவை இணைக்க முயன்று தோல்வியடைந்த டிரம்ப், தற்போது தனது பார்வையை வெனிசுலா பக்கம் திருப்பியுள்ளார். வெனிசுலாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக மாற்றினால் மட்டுமே அங்கு நிரந்தர அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என டிரம்ப் வாதிட்டு வருகிறார். மேலும், தனது கட்டளைகளுக்கு இணங்கவில்லை என்றால், டெல்சிக்கும் மதுரோவின் கதியே ஏற்படும் எனப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.
டெல்சியின் பதிலடி:
டிரம்ப்பின் இந்த மாகாண இணைப்புத் திட்டம் குறித்துப் பேட்டியளித்த அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறியதாவது: "வெனிசுலாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்தகைய சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் ஒருபோதும் பரிசீலிக்க மாட்டோம். இது எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது. நாங்கள் எங்கள் நாட்டின் விடுதலையை நேசிக்கிறோம்" என்றார்.
ஆரம்பத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்த டெல்சி, தற்போது நாட்டின் இறையாண்மைக்காக டிரம்ப்பை எதிர்த்து நிற்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் வளத்தைக் கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்காவிற்கும், தனது பதவியைத் தக்கவைக்க முயலும் டெல்சிக்கும் இடையிலான இந்த மோதல் அடுத்தகட்டமாக எங்குச் செல்லும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் இறந்துவிட்டாரா? பாகிஸ்தானில் கடும் பதற்றம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:42:06 AM (IST)

ஆகஸ்ட் 15 ‘இந்திய சுதந்திர நாள்’: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மாநிலங்கள் பிரகடனம்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:41:11 PM (IST)

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:50:59 PM (IST)

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)







