» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் மனைவி, 3 உறவினர்கள் சுட்டுக் கொலை: இந்திய வம்சாவளி நபர் கைது
ஞாயிறு 25, ஜனவரி 2026 8:58:50 PM (IST)
அமெரிக்காவில் குடும்ப தகராறில் மனைவி, மற்றும் 3 உறவினர்களை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி நபரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் மனைவி மீமூ டோக்ரா (43), 12 வயது மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மூவரும் அதே மாகாணத்தில் லாரன்ஸ்வில் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர்.ஆனால், உறவினர் வீட்டிலும், மீமு டோக்ரா, விஜய்குமார் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய் குமார், அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மனைவி மீமூ டோக்ரா, அவரது உறவினர்களான கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரை தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
அப்போது வீட்டில் இருந்த விஜய்குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகளும் அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர். அவர்களில் 12 வயது சிறுவன் 911 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் விரைந்து சென்று விஜய்குமாரை கைது செய்தனர். 3 குழந்தைகளையும் மீட்டனர். 4 சடலங்களை மீட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அட்லாண்டா போலீசார் விஜய்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைகுடாப் போரில் அதிரடி திருப்பம்: 4,000 கி.மீ. தூரம் பாயும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:47:13 AM (IST)

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பரிசீலனை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:23:35 PM (IST)

போர்க்காலச் சூழல் மத்தியில் ரமலான் பெருநாள்: அமைதி வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
சனி 21, மார்ச் 2026 11:58:42 AM (IST)

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு: அதிபர் திஸாநாயக்க தகவல்
வெள்ளி 20, மார்ச் 2026 4:07:14 PM (IST)

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்: ட்ரம்ப் - நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு!
வெள்ளி 20, மார்ச் 2026 11:45:05 AM (IST)

வடகொரியத் தேர்தலில் கிம் ஜாங் உன் வெற்றி: 0.07% எதிர்ப்பு வாக்குகளால் பரபரப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:46:37 PM (IST)








