» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமைதி பேச்சுவார்த்தை தோல்வி - பாகிஸ்தானுடன் போருக்கு தயார்: தலீபான்கள் அறிவிப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 10:42:34 AM (IST)
துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் உடன் போருக்கு தயார் என தலீபான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் தலீபான் அரசாங்கம் அதனை மறுத்துள்ளது.இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் பயங்கரவாத முகாமை தாக்குவதாக கூறி பாக்டிகா மாகாணம் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது வான்தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இரு நாடுகளின் முக்கிய எல்லையான டோர்காம் நுழைவாயில் மூடப்பட்டது.
பின்னர் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலையீட்டால் போர் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டினர். எனவே அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தலீபான் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், பேச்சுவார்த்தை தோல்விக்கு பாகிஸ்தானே காரணம் எனவும், எந்தவொரு நாடும் தங்களது உள்விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாது எனவும் கூறினார்.
எனவே தங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் போருக்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான பதற்றம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)










