» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
சனி 8, நவம்பர் 2025 12:37:05 PM (IST)

அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்கள் அதிகமாக நம்பியிருக்கும் ஹெச்1-பி விசாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை ஹெச்1-பி விசாவில் உள்ள விதிமீறல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டு முதற்கட்டமாக இன்று 175 விதிமீறல்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்கா செல்ல ஹெச்1-பி விசாவுக்கு விண்ணப்பிப்போரில் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு விசா வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, நரம்பியல் நோய்கள், மனநலம் சார்ந்த கோளாறுகள் உள்ளவர்களின் விசாக்களை நிராகரிக்குமாறு அமெரிக்காவில் உள்ள தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உடல்நலக் குறைவு உள்ளவர்களால் அமெரிக்காவுக்கு நிதிச்சுமை ஏற்படலாம், இந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க அதிக பணம் தேவைப்படும் என்பதால் விண்ணப்பதாரரின் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டு விசாவை ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்துமா, தூக்கத்தில் மூச்சுத்திணறல், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் தூதரக அதிகாரிகள் கவனத்தில்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரரின் குடும்பத்தினரின் உடல்நலத்தையும் சோதிக்க வேண்டும், குடும்பத்தினருக்கு பிரச்னை இருந்தால் அவர்களது பராமரிப்புக்கான செலவை செய்ய முடியுமா? விண்ணப்பதாரர் வேலையைத் தொடர முடியுமா? ஆகியவற்றை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)









