» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வெனிசுவேலாவைச் சேர்ந்த பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு: டிரம்புக்கு ஏமாற்றம்!
வெள்ளி 10, அக்டோபர் 2025 4:24:43 PM (IST)
2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படும் என நோபல் பரிசு தெரிவுக் குழு அறிவித்துள்ளது.
வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் ஜனநாயகத்துக்காகத் தொடர்ந்து போராடி தற்போது தலைமறைவாக இருப்பவர் மரியா கொரினா மச்சாடோ என்பது குறிப்பிடத்தக்கது.பல போர்களை நிறுத்தியிருக்கிறேன், எனவே, அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவந்த நிலையில், அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் உள்பட 8 போர்களைத் தான் நிறுத்தியதாக டொனால்ட் டிரம்ப் நிறுத்தியதாக கூறி வந்த நிலையில் ஏற்கனவே, நான்கு அமெரிக்க அதிபர்கள் நோபல் பரிசு வென்றிருக்கும் நிலையில், ஐந்தாவது அதிபராக இவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய ஏமாற்றம் டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 339 பேரில் டொனால்ட் டிரம்ப் பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது. உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகிவரும் நிலையில், அதற்காகப் போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும் என்று பரிசை அறிவித்த நார்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனநாயகத்துக்காகப் போராடி வருபவர்களுக்கே விருது என்றும், சர்வாதிகாரத்தை நம்பக் கூடியவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்பதையும்தான் இந்தக் கருத்து தெளிவுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது. நார்வே நோபல் குழுதான், நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்வு செய்கிறது. இந்தக் குழுவை நார்வே நாடாளுமன்றமே நியமனம் செய்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)

மோடி அழைப்பை ஏற்று அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்லவேன் : டிரம்ப் முடிவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:02:19 PM (IST)

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)








