» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு: ரூ.40ஆயிரம் கோடியை உதறி துறவியான மகன்!

சனி 30, நவம்பர் 2024 5:26:09 PM (IST)



மலேசிய தொழிலதிபர்  ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். மலேசியாவில் 5.1பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மலேசியாவின் 6 முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர். தமிழரான இவர் தொலை தொடர்பு, ஊடகம், பெட்ரோலியம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பரந்த வணிக சாம்ராஜ்யத்தை கொண்டவர். மலேசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவை அவரது முதலீட்டு நிறுவனமான உசாஹா டெகாஸ் அறிவித்துள்ளது. நாட்டை கட்டியெழுப்புவதற்கும், கார்ப்பரேட் உலகிற்கும் ஆனந்த கிருஷ்ணன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் 1980 மற்றும் 1990ம் ஆண்டு காலகட்டங்களில் தனது செல்வத்தின் பெரும்பகுதியை சம்பாதித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவரது மகன் ஒரு புத்த துறவி. இவரது இரண்டு மகள்களும் இவரது தொழில்களில் ஈடுபடவில்லை.

இலங்கை தமிழரான ஆனந்த கிருஷ்ணன், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மலேசியாவில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட் பகுதியில் குடியேறினர். அப்போதுதான் ஏகே கடந்த 1938-ம் ஆண்டு பிறந்தார். மலேசியாவின் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் தொடக்க கல்வியை தொடங்கி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார்.

ஆனந்த கிருஷ்ணனின் மனைவி மோம் வஜராங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது மகன் வென் அஜான் சிரிபான்யோ உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர். புத்தமத கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சிரிபான்யோ தனது தந்தையின் ரூ.40,000 கோடி சாம்ராஜ்யத்தை துறந்துவிட்டு புத்த துறவியாக மாறியது உலக அளவில் பரபரப்பு செய்தியானது. கடந்த 20 ஆண்டுகளாக சிரிபான்யோ தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் தாவோ டம் புத்த மடாலயத்தில் துறவியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தென் கொரியா அதிபர் வெளிநாடு செல்ல தடை!

செவ்வாய் 10, டிசம்பர் 2024 4:49:44 PM (IST)

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory