» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேகேதாட்டு அணைத் திட்டத்தால் இரு மாநிலங்களுக்கும் நன்மை: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி!
வெள்ளி 19, ஜூன் 2026 10:26:04 AM (IST)
மேகேதாட்டு அணைத் திட்டம் குறித்துத் தமிழக முதல்வர் விஜய்யுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியதாவது: மேகேதாட்டு அணைத் திட்டமானது என் இதயத்திற்கு நெருக்கமானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177 டிஎம்சி நீரை வழங்கக் கர்நாடகா எப்போதும் தயாராக இருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன். இத்திட்டத்தால் இரு மாநிலங்களுக்கும் பெரிய அளவில் நன்மை ஏற்படும். கன்னடர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவிலும், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். நீர் என்பது அனைத்து மக்களுக்கும் தேவையான பொதுவான ஒன்று. மேகேதாட்டு திட்டமானது ஒரு சமநிலை அணை (Balancing Reservoir) திட்டமாகும். அங்கு நீரைத் தேக்கி வைப்பதன் மூலம், வறட்சி காலங்களில் தமிழகத்திற்குத் தேவையான நீரை மிக எளிதாகத் திறந்துவிட முடியும்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் இருந்து ஒரு வாளி நீரைக்கூட நம்மால் கூடுதலாக எடுக்க முடியாது. இந்த அணை நீரை பெங்களூரு மக்களின் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்த முடியும். மேலும் மந்தியா, ஹாசன், சாம்ராஜ்நகர், துமகூரு ஆகிய மாவட்டங்களுக்கும் இதன் மூலம் எளிதாகக் குடிநீர் வழங்கலாம்.
இந்தத் திட்டத்திற்கு மத்திய நீர் ஆணையம் (Central Water Commission) விரைந்து அனுமதி வழங்க வேண்டும். மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் (MPs) ஒருமித்த குரலில் செயல்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:44:03 AM (IST)

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)








