» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாரதிராஜா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு : சந்திரபாபு நாயுடு இரங்கல்!
புதன் 10, ஜூன் 2026 5:11:50 PM (IST)

இயக்குநர் பாரதிராஜா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆந்திர மாநில முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார்.
ஆந்திர மாநில முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட துறைகளுக்கு அவர் பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளார். இந்திய திரையுலகிற்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன். மேலும், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்." என்று தமது இரங்கல் செய்தியில் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் சிஜேபி போராட்டம் தீவிரம்: தர்மேந்திர பிரதானுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!
திங்கள் 20, ஜூலை 2026 5:10:43 PM (IST)

நீட், ராமர் கோவில் விவகாரங்களால் கடும் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 4:23:28 PM (IST)

இஸ்ரோவில் இருந்து 1,000 விஞ்ஞானிகள் திடீர் விலகல்: குலசேகரப்பட்டினம் ஏவுதள திட்டம் பாதிப்பு?
திங்கள் 20, ஜூலை 2026 11:22:25 AM (IST)

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!
ஞாயிறு 19, ஜூலை 2026 1:30:06 PM (IST)

தனியார் பங்களிப்புடன் விண்வெளி ஆய்வு: சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய விக்ரம்-1!
சனி 18, ஜூலை 2026 4:06:16 PM (IST)

21-வது நாள் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் : சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி!
சனி 18, ஜூலை 2026 12:40:37 PM (IST)








