» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க கோரி மனுதாக்கல் : ஆளுநருக்கு உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?
சனி 9, மே 2026 3:53:28 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் மறுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரண்டு முக்கிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எழிலரசி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தான் தற்போது மிகப்பெரிய கட்சியாக உள்ளது. எனவே, அக்கட்சியின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும். இது தொடர்பாகத் தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை விரைந்து பிறப்பிக்க வேண்டும்."
முன்னாள் ஐ.ஜி. ராமசுப்பிரமணியின் மனு:
இதே கோரிக்கையை முன்வைத்து ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி (முன்னாள் ஐ.ஜி.) ராமசுப்பிரமணி என்பவரும் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ஒரு கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்பதை வலியுறுத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தவெக தலைவர் விஜய் ஏற்கனவே ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து "பெரும்பான்மையை நிரூபிக்கும் 118 உறுப்பினர்களின் பட்டியலைச் சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தற்போது இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் 116 என்ற எண்ணிக்கையில் உள்ள நிலையில், மீதமுள்ள 2 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் மிக விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் தலையீடு இருக்குமா அல்லது ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட மறுக்குமா என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது முடிவாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நூறு விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ சவால்!
செவ்வாய் 26, மே 2026 12:53:57 PM (IST)

ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி: ஜனநாயகம் வென்றதாக பிரதமர் நெகிழ்ச்சி!
திங்கள் 25, மே 2026 5:30:51 PM (IST)

புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வரைவு அறிக்கை வெளியீடு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
ஞாயிறு 24, மே 2026 8:51:01 PM (IST)

பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி: 10 நாட்களில் 3-ஆவது முறையாக உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!
சனி 23, மே 2026 10:41:07 AM (IST)

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் – பாஜக அரசு ஒப்புதல்!
வெள்ளி 22, மே 2026 4:23:56 PM (IST)

மீண்டும் வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலைதளம்: சமூக ஊடகங்களில் பெரும் புயல்
வியாழன் 21, மே 2026 5:33:37 PM (IST)










