» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இக்கட்டான சூழலில் தோழமை சக்திகளைக் கைவிட மாட்டோம்: அகிலேஷ் யாதவ் பகிரங்க ஆதரவு!
வெள்ளி 8, மே 2026 4:18:25 PM (IST)

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உடைந்த நிலையில், இக்கட்டான சூழலில் தோழமை சக்திகளைக் கைவிட மாட்டோம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியைச் சந்தித்த அவர், இன்று தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: இக்கட்டான நேரங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல. திமுக தோல்வி அடைந்த நிலையில், உடனடியாகக் கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் போக்கை மறைமுகமாக விமர்சித்தே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நேற்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து வன்மையான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்: திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து கொண்டு ஒரு மாநிலங்களவை இடம் மற்றும் 28 சட்டசபை இடங்களைப் பெற்றுக் கொண்ட காங்கிரஸ், வெற்றி பெற்ற மூன்றே நாட்களில் மாற்று அணிக்குச் சென்றது துரோகம்.
காங்கிரஸ் தனது சந்தர்ப்பவாத குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. பாஜக பிற மாநிலங்களில் செய்வதையே காங்கிரஸ் தமிழ்நாட்டில் திமுக-வுக்குச் செய்துள்ளது. புதுச்சேரியில் திமுக-வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டதும், அதற்குத் தலைமை ஆதரவு தெரிவித்ததும் தேர்தல் நடக்கும் போதே நடந்த துரோகங்கள். தேர்தலுக்குப் பின் திமுக தலைவரைச் சந்தித்து ஒரு நன்றி கூடத் தெரிவிக்காமல், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது".
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், காங்கிரஸ் தவெக-வுக்கு ஆதரவளிப்பதோடு வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளது. நீண்ட கால நட்பு சக்தியான காங்கிரஸின் இந்தத் திடீர் அணிமாற்றம் தமிழக அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி: ஜனநாயகம் வென்றதாக பிரதமர் நெகிழ்ச்சி!
திங்கள் 25, மே 2026 5:30:51 PM (IST)

புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வரைவு அறிக்கை வெளியீடு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
ஞாயிறு 24, மே 2026 8:51:01 PM (IST)

பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி: 10 நாட்களில் 3-ஆவது முறையாக உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!
சனி 23, மே 2026 10:41:07 AM (IST)

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் – பாஜக அரசு ஒப்புதல்!
வெள்ளி 22, மே 2026 4:23:56 PM (IST)

மீண்டும் வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலைதளம்: சமூக ஊடகங்களில் பெரும் புயல்
வியாழன் 21, மே 2026 5:33:37 PM (IST)

மத்தியில் உள்ள பாஜக அரசு விரைவில் அகற்றப்படும்: மம்தா பானர்ஜி முழக்கம்!
வியாழன் 21, மே 2026 3:40:07 PM (IST)










