» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: வீரர்களை தேசம் வணங்குகிறது - ராஜ்நாத் சிங் பெருமிதம்!
வியாழன் 7, மே 2026 4:48:02 PM (IST)
இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' அதிரடி நடவடிக்கை இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு நமது ராணுவ வீரர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் தலைவணங்குவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த ஆண்டு மே 7-ம் தேதி இந்திய முப்படைகளும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற அதிரடி வேட்டையைத் தொடங்கின.இதில் எல்லையில் இருந்த பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத் தயார்நிலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக 'ஆபரேஷன் சிந்தூர்' விளங்குகிறது. நமது படைகளுக்கு இடையேயான ஆழமான ஒத்துழைப்பும், ஈடு இணையற்ற துல்லியத் தாக்குதலும் நவீன ராணுவ நடவடிக்கைகளுக்குப் புதிய அளவுகோலை அமைத்துள்ளது. தேசத்தைப் பாதுகாத்து வரும் நமது வீரர்களின் துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் நான் தலைவணங்குகிறேன்."
எந்தவொரு இக்கட்டான தருணத்திலும் இந்தியப் பாதுகாப்புப் படைகள் தீர்க்கமாகச் செயல்பட எப்போதும் தயாராக உள்ளன என்பதை உலகிற்கு நிரூபித்த முக்கிய நடவடிக்கையாக 'ஆபரேஷன் சிந்தூர்' பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிகரமான நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை இன்று நாடு முழுவதும் தேசபற்றுடன் நினைவுகூரப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பதவி விலக மறுத்த மமதா: சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
வியாழன் 7, மே 2026 9:00:04 PM (IST)

வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து: அவமதித்தால் 3 ஆண்டு சிறை!
வியாழன் 7, மே 2026 11:56:11 AM (IST)

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட மத்திய அரசு மீண்டும் கெடு: புதிய அரசுக்கு காத்திருக்கும் முதல் சவால்!
வியாழன் 7, மே 2026 10:22:12 AM (IST)

விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றவர்கள் மீதே கார் மோதி விபத்து - 8பேர் உயிரிழப்பு!
புதன் 6, மே 2026 11:28:44 AM (IST)

உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
புதன் 6, மே 2026 11:20:55 AM (IST)

முதல்வர்களை தேர்வு செய்ய பாஜக மேலிடம் தீவிரம்: அமித் ஷா, ஜே.பி. நட்டா நியமனம்!
செவ்வாய் 5, மே 2026 5:35:41 PM (IST)










