» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அனைத்து மாநிலங்களிலும் 50% தொகுதிகள் உயர்வு: மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:12:22 PM (IST)
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும்; இதனால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தார்.
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட நாடாளுமன்றச் சிறப்பு அமர்வின் முதல் நாளான இன்று (16.04.2026), மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 185 வாக்குகளும் பதிவாகின. பெரும்பான்மை ஆதரவு இருந்ததால், மசோதாக்களைத் தாக்கல் செய்யச் சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி வழங்கினார்.
மசோதாக்களைத் தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: "புதிய மசோதாவின்படி அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்கள் 50% அதிகரிக்கப்படும். இதன் மூலம் மக்களவையின் மொத்த இடங்கள் தற்போதுள்ள 543-லிருந்து 815 ஆக உயரும்."
"இந்த 815 இடங்களில் 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதனால் எந்த மாநிலத்திற்கும் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படாது; அனைத்து மாநிலங்களும் தங்கள் பலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்" என்று தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்துவதே இந்த மசோதாக்களின் முதன்மை நோக்கம் என்றார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மசோதாக்கள் மீது 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்றார். எனினும், சபாநாயகர் ஓம் பிர்லா விவாத நேரத்தைப் 15 முதல் 18 மணி நேரமாக உயர்த்தினார். இந்த மசோதாக்கள் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை (ஏப்ரல் 17) மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
peopleApr 17, 2026 - 09:36:57 PM | Posted IP 104.2*****
we request to you in this act not amended in tamilnadu state
peopleApr 17, 2026 - 09:35:18 PM | Posted IP 104.2*****
we request to you in this act amended in tamilandu state.
மேலும் தொடரும் செய்திகள்

ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்க 2027 ஜூன் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு: புதிய 'செயலி அறிமுகம்!
செவ்வாய் 19, மே 2026 12:51:15 PM (IST)

குடகு சுற்றுலாத் தலத்தில் கோர விபத்து: யானைகள் சண்டையில் சிக்கி பெண் பலி!
திங்கள் 18, மே 2026 5:55:02 PM (IST)

கேரளாவில் 10 ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி: புதிய முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்பு!
திங்கள் 18, மே 2026 12:34:51 PM (IST)

ஹார்முஸ் நீரிணையை கடந்து 20,000 டன் சமையல் எரிவாயுவுடன் குஜராத் வந்தது இந்தியக் கப்பல்!
திங்கள் 18, மே 2026 10:54:33 AM (IST)

ஓடும் காரில் திடீர் தீ; சிசுவுடன் இளம்பெண் பலியான கொடூரம் - போலீஸ் விசாரணை!
ஞாயிறு 17, மே 2026 11:49:21 AM (IST)

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)











MANIKAMApr 18, 2026 - 11:03:01 AM | Posted IP 162.1*****