» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை!
சனி 11, ஏப்ரல் 2026 4:54:44 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கட்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த நீதிமன்ற வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் இலவசங்களை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகையச் செயல்பாடுகள் அரசியல் சாசன விதிகளுக்கும், தேர்தல் நடத்தை விதிகளுக்கும் முற்றிலும் எதிரானவை.
எனவே, இந்த முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தேர்தல் நடைமுறைகளை நிறுத்தி வைக்க இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்க உள்ளதால், அதன் தீர்ப்பு அல்லது கருத்துக்கள் தமிழகத் தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்க 2027 ஜூன் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு: புதிய 'செயலி அறிமுகம்!
செவ்வாய் 19, மே 2026 12:51:15 PM (IST)

குடகு சுற்றுலாத் தலத்தில் கோர விபத்து: யானைகள் சண்டையில் சிக்கி பெண் பலி!
திங்கள் 18, மே 2026 5:55:02 PM (IST)

கேரளாவில் 10 ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி: புதிய முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்பு!
திங்கள் 18, மே 2026 12:34:51 PM (IST)

ஹார்முஸ் நீரிணையை கடந்து 20,000 டன் சமையல் எரிவாயுவுடன் குஜராத் வந்தது இந்தியக் கப்பல்!
திங்கள் 18, மே 2026 10:54:33 AM (IST)

ஓடும் காரில் திடீர் தீ; சிசுவுடன் இளம்பெண் பலியான கொடூரம் - போலீஸ் விசாரணை!
ஞாயிறு 17, மே 2026 11:49:21 AM (IST)

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)










