» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கட்டுக்கட்டாகப் பணம் எரிந்த விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:23:06 PM (IST)

நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லாத நிலையில், குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு அறையில் கட்டுக்கட்டாகப் பணம் எரிந்து சாம்பலாகிக் கிடந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, யஷ்வந்த் வர்மா டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது: "நான் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த ராஜினாமாவை உடனடியாக அமலுக்கு வரும்படி செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையில் இந்தப் பதவியில் பணியாற்றியதை மரியாதைக்குரிய ஒன்றாகக் கருதுகிறேன்." இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலங்கானாவில் கிரேன் சரிந்து விபத்து: பிஹார் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:36:14 PM (IST)

சகோதரியின் வங்கிப் பணத்தை எடுக்க சடலத்துடன் வந்த நபர்: ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:24:52 PM (IST)

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு: ஐ.எஸ். பயங்கரவாதி முகமது ஷாரிக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:18:39 PM (IST)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:20:52 PM (IST)

பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:19:11 AM (IST)

கல்பாக்கம் அணு உலை சாதனை - இந்தியாவிற்குப் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:17:30 AM (IST)








