» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இஸ்ரேலுக்கான ஏர் இந்தியா விமான சேவை மே 31 வரை ரத்து: போர்ப் பதற்றத்தால் அதிரடி முடிவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:29:30 AM (IST)
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கான விமான சேவையை மே 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் போர் சூழலால் பல்வேறு முக்கிய விமான நிறுவனங்கள் ஏற்கெனவே இஸ்ரேலுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனமும் தனது சேவையை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதுடெல்லி - டெல் அவிவ் இடையிலான நேரடி விமான சேவைகள் மே 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
தற்போது இஸ்ரேல் நாட்டின் விமான நிறுவனங்கள் மட்டுமே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அங்குச் சேவைகளை வழங்கி வருகின்றன. ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு, இஸ்ரேலில் வசித்து வரும் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலை விட்டு அவசரமாக வெளியேற விரும்பும் இந்தியர்கள், தற்போது தரைவழி எல்லைகள் வழியாக அண்டை நாடுகளான ஜோர்டான் அல்லது எகிப்திற்குச் சென்று, அங்கிருந்து மற்ற விமான சேவைகள் மூலம் இந்தியாவிற்கு வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். போர்ப் பதற்றம் தணிந்த பின்னரே மீண்டும் இயல்பான விமான சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் கருவைக் கலைக்க காலக்கெடு தேவையில்லை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:46:58 PM (IST)

ஆதார் சிஸ்டத்தில் ஊடுருவல்: ஏஐ பயன்படுத்தி தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல் சிக்கியது!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:42:55 PM (IST)

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:09:27 PM (IST)

தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 4:49:22 PM (IST)

துருக்கியில் பதுங்கியிருந்த போதைப்பாொருள் கடத்தல் மன்னன் கைது: இந்தியாவுக்கு நாடு கடத்தல்!
புதன் 29, ஏப்ரல் 2026 11:49:58 AM (IST)

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் விறுவிறுப்பு – காலை 9 மணி வரை 18.39% வாக்குகள் பதிவு!
புதன் 29, ஏப்ரல் 2026 10:29:03 AM (IST)









