» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வரதட்சணைக்காக கொடுமை: 4 மாத கர்ப்பிணி மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!
புதன் 18, மார்ச் 2026 4:59:20 PM (IST)
தெலுங்கானாவில் வரதட்சணைக்காக 4 மாத கர்ப்பிணியான காதல் மனைவியைக் கணவனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மாதப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (19). பிரபல யூடியூபரான இவருக்கும், யேசுகோனி குட்டவைச் சேர்ந்த ஹரிபாபு (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது வைஷ்ணவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.திருமணமான சில மாதங்களிலேயே ஹரிபாபு தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். வைஷ்ணவியின் குடும்பத்தினரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு இருவரும் உணவு அருந்திவிட்டு அறைக்குத் தூங்கச் சென்றனர். நள்ளிரவில் திடீரென எழுந்த ஹரிபாபு, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வைஷ்ணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். மேலும் நெற்றி, கை என உடல் முழுவதும் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
வைஷ்ணவியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்தபோது, ஹரிபாபு போர்வையைப் போர்த்திக் கொண்டு இருவரும் தூங்குவது போல நடித்துள்ளார். இதனால் அவர்கள் சென்றுவிட்டனர். நேற்று காலை அறைக்குச் சென்று பார்த்தபோது, வைஷ்ணவி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் ஹரிபாபு தனது இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டார்.
வைஷ்ணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள கொலையாளி ஹரிபாபுவைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
வியாழன் 19, மார்ச் 2026 4:57:50 PM (IST)

தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு
வியாழன் 19, மார்ச் 2026 4:41:28 PM (IST)

பெங்களூருவில் அதிர்ச்சிச் சம்பவம்: முதியவரை கூரியரில் அனுப்ப முயன்ற குடும்பம்!
புதன் 18, மார்ச் 2026 5:52:45 PM (IST)

டெல்லி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:35:53 PM (IST)

வராக்கடன் வெறும் 2% தான்: முத்ரா திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!
புதன் 18, மார்ச் 2026 12:08:12 PM (IST)

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: செந்தில் பாலாஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை!
புதன் 18, மார்ச் 2026 8:24:38 AM (IST)








