» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிசம்பருக்குள் ஹைதராபாத் டீசல் பேருந்துகள் இல்லாத நகரமாகும்: முதல்வர் ரேவந்த் ரெட்டி

திங்கள் 9, மார்ச் 2026 10:54:47 AM (IST)



டிசம்பருக்குள் ஹைதராபாத் டீசல் பேருந்துகள் இல்லாத நகரமாகும் என்று தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஹைதராபாத் நகரின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.

ஹைதராபாத் நகரில் தற்போது இயங்கி வரும் 2,800 டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார ஏ.சி. பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் 9-ம் தேதிக்குள் நகருக்குள் டீசல் பேருந்துகளே இருக்காது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 லட்சம் டீசல் ஆட்டோக்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்கள் கொண்டு வரப்படும். மின்சார வாகனங்களுக்குத் தெலங்கானா அரசு வரி விதிப்பதில்லை.  ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிப்பது மற்றும் நகருக்குள் உள்ள மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை வெளியேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் சிக்கல்கள் ஹைதராபாத்தில் இல்லை. எனவே, இந்நகரை டோக்கியோ அல்லது சிங்கப்பூர் போன்ற மாசற்ற சர்வதேச நகரமாக மாற்ற காங்கிரஸ் அரசு விரும்புகிறது. கல்லூரி மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory