» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் நெகிழ்ச்சி: மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த 10 மாதக் குழந்தை!!

ஞாயிறு 15, பிப்ரவரி 2026 9:46:35 AM (IST)



கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாதப் பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம், அம்மாநிலத்திலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமையைப் பெற்றுள்ளார்.

கடந்த 5-ம் தேதி, குழந்தையின் தாய் மற்றும் தாத்தா, பாட்டியுடன் கோட்டயத்திலிருந்து திருவல்லாவிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த அனைவரும் காயமடைந்தனர். படுகாயமடைந்த குழந்தை அலின் ஷெரின் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அக்குழந்தை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

தங்கள் செல்லக் குழந்தை மீண்டு வராது என்ற வேதனையிலும், மற்ற உயிர்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் குழந்தையின் பெற்றோர் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

கல்லீரல்: திருவனந்தபுரம் கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.

சிறுநீரகங்கள்: திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது.

இதய வால்வு மற்றும் கண்கள்: ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ நிறுவனம் மற்றும் அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்பட்டன.

அமைச்சரின் பாராட்டு: இந்த நெகிழ்ச்சியான செயல் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "குழந்தையை இழந்த தாங்க முடியாத துயரத்திலும், மற்றவர்களின் வாழ்விற்காக உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்த பெற்றோரின் முடிவு போற்றுதலுக்குரியது. துயரத்தில் இருக்கும் அந்தக் குடும்பத்திற்கு மாநில அரசு துணை நிற்கும். இவர்களின் செயல் கேரளாவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது அலின் ஷெரின் தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் அஞ்சலியைப் பெற்று வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory