» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
திங்கள் 8, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, 2022-ம் ஆண்டு பொதுக்குழுவால் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ். சூரியமூர்த்தி சென்னை 4-வது உரிமையியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.அதேவேளையில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சென்னை உரிமையியல் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து ஒரு உத்தரவை பிறப்பித்தது.
உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி பாலாஜி, சூரிய மூர்த்தி அ.தி.மு.க.வின் உறுப்பினரே இல்லை என்றும் உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சி விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியாது என்ற எடப்பாடி தரப்பு வாதத்தையும் ஏற்று சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரிய மூர்த்தி தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக சூரிய மூர்த்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் உன்னிகிருஷ்ணன் மறைவு: பினராயி விஜயன் இரங்கல்
செவ்வாய் 3, மார்ச் 2026 4:38:18 PM (IST)

இன்று வானில் அரிய நிகழ்வு: ரத்த நிலவை வெறும் கண்களால் பார்க்கலாமா?
செவ்வாய் 3, மார்ச் 2026 12:47:38 PM (IST)

பெண் குழந்தைகளுக்கான லட்சாதிபதி மகள் திட்டம் அறிமுகம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:13:16 AM (IST)

மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும்: நெதன்யாகுவுடன் மோடி அவசர ஆலோசனை
திங்கள் 2, மார்ச் 2026 5:55:10 PM (IST)

நாக்பூர் வெடிபொருள் தொழிற்சாலையில் கோர விபத்து; 17 பேர் உடல் சிதறி பலி!
திங்கள் 2, மார்ச் 2026 11:34:33 AM (IST)

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!
ஞாயிறு 1, மார்ச் 2026 11:55:03 AM (IST)










