» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செயலற்ற மொபைல் எண்களின் யுபிஐ சேவை ஏப். 1 முதல் நிறுத்தம்: என்பிசிஐ அறிவிப்பு!

சனி 22, மார்ச் 2025 12:11:56 PM (IST)

நீண்ட காலம் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் ஏப். 1 முதல் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் NPCI அறிவித்துள்ளது.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள் வரையில் செயலற்றதாக இருந்தால், அதன் யுபிஐ சேவைகள் செயலிழக்கச் செய்யப்படும் என்ற புதிய விதிமுறையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களில் அழைப்புகள், எஸ்எம்எஸ், இணையச் சேவைகளை, அவ்வப்போது பயன்படுத்துவதன் மூலம் இதனைத் தடுக்கலாம். நீண்ட காலம் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயலிழக்கச் செய்துவிடும். செயலிழக்கப்பட்ட எண்களை புதிய பயனர்களுக்கு வழங்குவதையும் பெரும்பாலும் வழக்கமாக சில நிறுவனங்கள் கொண்டுள்ளன.

இவ்வாறான செயல்பாட்டின்போது, ஒரே எண்ணை புதிய பயனர் வாங்கும்போது, அந்த எண்ணின் முந்தைய பயனரின் யுபிஐ செயல்பாடுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


New Shape Tailors





Arputham Hospital





Thoothukudi Business Directory